நடிகை என்ற பெருமையை கீர்த்தி சுரேஷ் பெற்றார்

2018ம் ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த நடிகை என்ற பெருமையை கீர்த்தி சுரேஷ் பெற்றார். அவரது நடிப்பில், தெலுங்கில், “அஞ்ஞாதவாசி, மகாநடி” ஆகிய படங்களும், தமிழில் “தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார்” ஆகிய படங்களும் வெளிவந்தன.

இந்த இரண்டு மொழிகளிலும், அவர் கைவசம் வேறு எந்தப் புதுப் படங்களும் இல்லாமல் இருந்தது. மலையாளத்தில் மட்டும் ‘மரக்கார் – அராபிக்கடலின்டே சிம்ஹம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்போது புதிதாக தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க சம்மதித்து, அந்தப் படத்தின் பூஜையில் இன்று(ஜன.,10) கலந்து கொண்டுள்ளார்.

‘மகாநடி’ படத்திற்குப் பிறகு கீர்த்தி நடிக்கும் தெலுங்குப் படம் இது. இப்படத்தில் அவர்தான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நரேந்திரா என்ற அறிமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார்.

Sharing is caring!