நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் யார் தெரியுமா..?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்ப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து தமிழ் சினிமாவின் நீதான அவன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதைத்தொடர்ந்து, பல படங்களில் நடித்திருந்தாலும், காக்காமுட்டை என்ற படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருனததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

பின்னர், செக்க சிவந்த வானம், வடசென்னை, கனா, ஆகிய படங்கள் இவரை முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பெற செய்தது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஸ் குறித்து பல விடயங்கள் அறிந்திருந்தாலும், அவரது சகோதரர் குறித்து யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவரது சகோதரர் பிரபல சீரியல் நடிகர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, வள்ளி, அழகு, கேளடி கண்மனி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சிவா மனசுல சக்தி என்ற தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

Sharing is caring!