நடிகை சஞ்சனா கல்ராணி தனது மீ டூ புகாருக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்

பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் பிரபல இயக்குனர் ரவிஸ்ரீவத்சா மீது மீ டூவில் பாலியல் புகார் கூறினார். அவரது இயக்கத்தில் ஹண்டா ஹண்டதி என்ற படத்தில் நடித்தபோது படத்தின் ஹீரோவுக்கு 50 முறை முத்தம் கொடுக்கச் சொல்லி துன்புறுத்தியதாக தெரிவித்திருந்தார். இதனை ரவிஸ்ரீவத்சா மறுத்தார். “ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால் ரீடேக் எடுப்பது வழக்கம். அப்படித்தான் அந்த காட்சி எடுக்கப்பட்டது” என்றார்.

இந்த நிலையில் சஞ்சனா கல்ராணி, தனது மீ டூ புகாருக்கு வருத்தம் தெரிவித்திருப்பதுடன், இயக்குனரிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

நான் எனது வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான அனுபவத்தைச் சொன்னேன். அப்போது எனக்கு மிகவும் குறைந்த வயது என்பதால் சொல்ல முடியவில்லை. இப்போது அதற்கான வாய்ப்பு அமைந்ததால் சொன்னேன். யாரையும் களங்கப்படுத்த வேண்டும் என்பதோ, தண்டிக்க வேண்டும் என்பதோ என் நோக்கம் அல்ல.

இது தொடர்பாக நான் மதிக்கும் நடிகர் அம்ரீஷ், தொட்டண்ணா, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் என்னிடம் பேசினார்கள். அவர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து ஹண்டா ஹண்டதி பட இயக்குனர் மற்றும் படக்குழுவினர். கன்டன நடிகர் சங்கம், வர்த்தக சங்கம் ஆகியவற்றிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இது குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.

Sharing is caring!