நடிகை சமீரா ரெட்டியின் மகளா இது..!

கடந்த 2008 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி.

பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே அதிகளவு பிரபலமடைந்தார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னனி நடிகையாக திகழ்ந்த நடிகை சமீரா கடந்த 2014 ஆம் ஆண்டு அக்‌ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு முழுக்குபோட்ட அவர் குடும்ப வாழ்க்கையில் பிஸியானார்.

இந்நிலையில் சமீரா ரெட்டிக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில், சமீபத்தில் அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது.

சமீரா ரெட்டி தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sharing is caring!