நடிகை டாப்ஸியை மட்டும் பேச அழைக்காத தொலைக்காட்சி

மும்பை:
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேச அழைக்காததால் டாப்சி விரக்தியடைந்துள்ளார்.

பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகை டாப்சியை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேச அழைக்காததால், அவர் விரக்தியடைந்து பேட்டியளித்திருக்கிறார்.

அமிதாப்பச்சன், டாப்சி நடித்த படம் பிங்க். இந்த படம்தான் தற்போது தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அமிதாப் வேடத்தில் அஜித் நடிக்கிறார். வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா நடிக்கின்றனர். ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

பிங்க் இந்தி படத்தில் நடித்தவர்களை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அழைத்து உரையாடினார்கள். ஆனால் முக்கிய வேடத்தில் நடித்த டாப்சியை அவர்கள் அழைக்கவில்லை. பேட்டியை கண்ட ரசிகர்கள் டாப்சியிடம் இதுபற்றி விசாரிக்க தொடங்கினார்கள். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நீங்கள் பேட்டியில் பங்கேற்காதது ஏன்? என்று கேட்டதும் டாப்சி வருத்தமானார்.

ஆனாலும் சிரித்தபடி சமாளித்தவர், ‘நல்ல கேள்வி… எனக்கு அந்த பேட்டியில் பங்கேற்கும் தகுதி இன்னும் வரவில்லை. அதற்கான தகுதிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று விரக்தியாக பதில் அளித்தார்.

இந்த பதிலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, ‘எல்லாவற்றிலும் நீங்கள் புத்திசாலி. எல்லா தகுதியும் உங்களுக்கு உண்டு’ என ஆறுதல் கூறத் தொடங்கினர். உடனே டாப்சி ‘உங்களிடமிருந்து நான் ஜாலியான பதிலைத்தான் எதிர்பார்த்தேன். மற்றபடி எனக்கு எந்த வருத்தமும், விரக்தியும் இல்லை’ என்றார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!