நடிகை பிரியங்கா சோப்ரா திருமண வரவேற்பில் பங்கேற்ற பிரதமர்

புதுடில்லி:
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ் திருமண வரவேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்சை காதலித்தார். இவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 1-ம் தேதி கிறிஸ்துவ முறைப்படியும், டிச.2-ம் தேதி இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி டில்லி தாஜ் ஹோட்டலில் நடந்தது. முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள், வி.ஐ.பி.க்கள் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக அங்கிருந்து புறப்பட்டார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!