நடிகை மதுமிதா திருமணத்தில் சீரியஸாக பேசிய நடிகர் சூரி

சென்னை:
நடிகை மதுமிதா திருமணத்தில் காமெடியாக பேசுவார் சூரி என்று நினைத்தால் சீரியஸாக பேசி உள்ளார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துடன் ஜாங்கிரி காமெடி மூலம் பிரபலமானவர் மதுமிதா. இவருக்கு சமீபத்தில் தான் தனது மாமாவுடன் திருமணம் நடந்து முடிந்தது.

இரு தரப்பு பெற்றோர்களும் ஓரளவு மட்டுமே சம்மதித்த இத்திருமணத்தை நடிகை நளினி சிறப்பாக நடத்தி முடித்தாராம்.
மேலும் இத்திருமணத்திற்கு வருகை தந்த நடிகர் சூரி எல்லாரை விடவும் வித்தியாசமாக, எல்லா கஷ்டத்தையும் (மதுமிதா) உங்க கிட்ட கொடுத்துட்டோம். நீங்க தான் (அவரது கணவர்) மாற்ற வேண்டும் என சீரியஸாக பேசிவிட்டு சென்றாராம்.

காமெடியாக பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் மத்தியில் சீரியஸாக பேசி உள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!