நடிகை மோனிஷாவின் தாயார் உருக்கம்

இரண்டு தினங்களுக்கு முன் அதிகாலை கொல்லம் – திருவனந்தபுரம் சாலையில் நடந்த கார் விபத்தில் மலையாள இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மற்றும் அவரது மனைவி படுகாயமடைந்தனர். அவர்களது இரண்டு வயது மகள் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே பலியானார் இந்த நிகழ்வு மலையாள திரையுலகில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இளம் வயதிலேயே மறைந்த நடிகை மோனிஷாவின் தாயார் ஸ்ரீதேவி உன்னி, இந்த துயர நிகழ்வு குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ஆம்.. பல வருடங்களுக்கு முன் மோனிஷாவையும் இதேபோன்ற ஓர் அதிகாலைப்பொழுதில் ஒரு கார் விபத்தில் தன் கண்ணெதிரே பறிகொடுத்தவர் தான் ஸ்ரீதேவி உன்னி.

எண்பதுகளில் மலையாளத்தில் பிரபலமாக வலம் வந்தவர் தான் நடிகை மோனிஷா.. தமிழில் பூக்கள் விடும் தூது, உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன், மூன்றாவது கண் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மோனிஷா பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனது அம்மாவுடன் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு சென்றபோது தான் விபத்தில் சிக்கி உயிரிழந்தாராம்.

அதுமட்டுமல்ல, அதற்குப்பின் தற்போது வரை அந்த பகுதியில் அதிகாலை விபத்துக்கள் நிறைய நடந்துள்ளன.. அதை கேள்விப்படும்போதெல்லாம் என் மனம் வேதனையால் நிறையும். ஆனால் இந்த விபத்துக்களுக்கு காரணமான அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை என்பது இன்னும் வருத்தமளிக்கிறது என்கிறார் ஸ்ரீதேவி உன்னி

Sharing is caring!