நடிகை ஶ்ரீரெட்டியின் கதை

பாலியல் கொடுமை பற்றியும், தொழில்நுட்ப வளர்ச்சியால் நிகழும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறித்தும் பேசும் ஒரு படமாக, கண்ணியமாக துளியும் ஆபாசக் கலப்பின்றி உருவாகி வருகிறது பென் விலை வெறும் ரூபாய் 999 என்கிற படம். சுருக்கமாக PV999 .

அறிமுக இயக்குநர் வரதராஜ் இயக்கியுள்ளார். இவர் அடிப்படையில் ஒரு எடிட்டர். விளம்பரப் படங்கள் ஆவணப்படங்கள் என்று பணியாற்றியவர்.

“சமூகத்தில் ஆணுக்கு நிகரான பங்கு பெண்களுக்கு உண்டு. ஆனால் அவர்கள் போகப் பொருளாகேவே சமுதாயம் பார்க்கிறது. ஆண்களிடம் பெண்கள் பற்றிய பார்வை மாறியுள்ளது. அவர்களை சக மனுஷியாக நினைக்க வேண்டும், மதிக்க வேண்டும், நடத்த வேண்டும் என்பதை இப்படம் கூறுகிறது” என்கிறார் இயக்குநர் வரதராஜ்.

அக்டோபரில் பாடல்களும், நவம்பரில் படம் வெளியாகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை வரலட்சுமி வெளியிட்டார்.

சமீபத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கும் நடிகை ஶ்ரீரெட்டியின் கதை தான் இது என்றும் திரைத்துறை வட்டாரங்களில் பேச்சு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து இயக்குநரிடம் கேட்டால் படம் வரட்டும் பாருங்கள் என்கிறார்.

Sharing is caring!