நடிகை ஸ்ரீரெட்டி புகார்… நடவடிக்கை எடுப்பேன்… சுந்தர்.சி காட்டம்

சென்னை:
சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்… எடுப்பேன்… என்று பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் சுந்தர். சி.

தெலுங்கு சினிமாவில் பலர் மீது செக்ஸ் புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டியின் பார்வை இப்போது தமிழ் திரைத்துறை பக்கம் திரும்பி உள்ளது. இதற்கு முதல் பலி முருகதாஸ். அடுத்ததாக நடிகர் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் மீது குற்றம் கூறி கோலிவுட்டை அதிரவிட்டார்.

தற்போது சுந்தர்.சி மீது குற்றம் கூறியுள்ளார். உடன் இதற்கு பதிலளித்துள்ள சுந்தர்.சி, ஸ்ரீரெட்டி கூறியதெல்லாம் பொய், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கோபமாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மீண்டும் ஸ்ரீரெட்டி தன்னுடைய பேஸ்புக்கில் சுந்தர்.சி பிரச்சனையில் விளக்கம் கொடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!