நடித்து முடித்ததுமே டப்பிங் பேசும் மம்முட்டி

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் ஒய்.எஸ்.ஆர் வேடத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. யாத்ரா என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை மஹி வி.ராகவ் இயக்குகிறார்.

இந்தப்படத்தில் நடிக்கும் முன்பாக ராஜசேகர் சம்பந்தப்பட்ட விஷயங்களை நன்றாக உள்வாங்கி கொண்டு நடித்து வருகிறார் மம்முட்டி. மேலும், ஒவ்வொரு நாளும் தான் ஸ்பாட்டில் நடிக்கும் காட்சிகள் எடிட் செய்யப்படுவதால், நடித்து முடித்ததும் டப்பிங் ஸ்டுடியோவிற்கு சென்று அன்றைய தினம் நடித்த காட்சிகளுக்கான டப்பிங்கையும் பேசி வருகிறாராம். அந்த அளவுக்கு ஒய்எஸ்ஆர் கதாபாத்திரத்திற்கு கூடுதலாக மெனக்கெடுகிறார் மம்முட்டி.

Sharing is caring!