‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ இடைக்காலத் தடை

ரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற பெயரில் தயாராகியுள்ள படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாகவும் கவின் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர்.

ஷிவகுமார் அரவிந்த் இயக்கியுள்ள இந்த படம் எதிர்வரும் 27 ஆம் திகதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படத்தை எதிர்த்து திரைப்பட விநியோகஸ்தர் மலேசியா பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில் பின்வருமாறு கூறியுள்ளார்.

நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தரிடம் இருந்து வாங்கினேன். இதற்காக ரூ.8 இலட்சம் முன்பணமாகக் கொடுத்து ஒப்பந்தம் போட்டேன். அதன் பிறகும் பல கட்டங்களாக பணம் கொடுத்தேன். மொத்தம் ரூ.25,20,000 வழங்கி இருக்கிறேன். ஆனால் திட்டமிட்ட திகதியில் படம் வெளியாகவில்லை. இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. பணத்தை திருப்பித்தரும்படி கேட்டேன். இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் பொலிசிலும் புகார் அளித்தேன். பணத்தை தராமல் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்

இதைத்தொடர்ந்து ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை 30ஆம் திகதி வரை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

Sharing is caring!