நந்தாவாகியிருக்க வேண்டியவர் அஜீத்… உலா வரும் போஸ்டர்

சென்னை:
நந்தா படத்தில் முதலில் நடித்திருக்க வேண்டியவர் அஜித் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் அஜித் நடிக்க வேண்டிய பல படங்களில் சூர்யா நடித்துள்ளார். அதிலும் அவர் தவறவிட்ட நேருக்கு நேர், நந்தா, கஜினி, காக்க காக்க ஆகிய படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகன் என சூர்யா தன்னை நிரூபித்த படம் நந்தா. இப்படத்திலும் முதலில் அஜித் தான் நடிக்கவிருந்தார். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி இருந்தார்.

அஜித் நடிப்பதாக அறிவித்தவுடன் வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!