நம்ம ஆட்சி வரும்ல தம்பி..வரும் பாரு…’என்.ஜி.கே’ ட்ரைலரை பாருங்க…!

பல மாதங்களாக சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’என்.ஜி.கே’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’என்.ஜி.கே’. அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து, ட்ரைலர் எப்பொழுது வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 29-ம் தேதி ட்ரைலர் வெளியாகும் என கடந்த வியாழக்கிழமை தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

திட்டமிட்டப்படி ’என்.ஜி.கே’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இது ஒரு முழுமையான அரசியல் திரைப்படம் என்று ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. ‘ நீ கொஞ்சம் கூட்டத்தோடு அரசியல்ல சேர்ந்துட்டா  நேரா உள்ள விட்டுருவாங்கனு நெனச்சியா’, ‘அது சுடுகாடு…உள்ளே போனவன் பொனமாதான் வெளியே வருவான்’, ’உண்மையிலே நம்ம சுதந்திரத்தை பிரிட்டீஷ்காரங்ககிட்ட வாங்கி அரசியல்வாதிகளிடம் கொடுத்திருக்கிறோம்’ போன்ற வசனங்கள், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. சூர்யாவின் நடிப்பு இன்னும் அதுக்கு மேல இருக்கு. ட்ரைலரில் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை மிரட்டுகிறது.

வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து பல படைப்புகளை கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன். தற்போது அவரது பாணியில் ஒரு அரசியல் படத்தை கொடுத்திருக்கிறார் எனத் தெரிகிறது.

Sharing is caring!