நயன்தாராவின் “இமைக்கா நொடிகள்” விரைவில்

நயன்தாரா நடித்துள்ள `இமைக்கா நொடிகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா – நயன்தாரா – ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இமைக்கா நொடிகள்’. ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமான இதில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகை நயன்தாரா தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அதிகம் நடித்துவருகிறார். சென்ற வாரம் வெளியான கோலமாவு கோகிலா படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதை தொடர்ந்து இமைக்கா நொடிகள் படமும் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக நயன்தாராவும், நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.ஒரே மாதத்தில் நயன்தாராவுக்கு இரண்டாவது படமும் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது நயன்தாராவின் மற்றொரு படமான இமைக்கா நொடிகள் படம் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Sharing is caring!