நயன்தாராவின் ஐரா ட்ரைலர்

விஸ்வாசம் படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் “ஐரா”. கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.  இதனை ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் என்பவர்  இயக்கியுள்ளார். படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.  இந்நிலையில் மார்ச் 20 ல் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Sharing is caring!