நயன்தாராவின் ஐரா படத்திலும் நடிக்கிறார் யோகிபாபு

சென்னை:
நயன்தாராவின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் காமெடி டான் யோகி பாபு என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

யோகிபாபு தற்போது கோலிவுட்டின் காமெடி டான் போல ஆகிவிட்டார். சர்கார், விஸ்வாசம் என்று விஜய், அஜித் படத்திலும் நடித்து வருகிறார். இவர் நயன்தாராவுடன் நடித்த கோலமாவு கோகிலா படத்தில் நடித்து பெரும் ஹிட்டானது.

அதிலும் கல்யாண வயசு தான் பாடல் செம ட்ரெண்டிங். நயன்தாராவுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். தற்போது நயன்தாரா 2 வேடங்களில் ஐரா என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
லட்சுமி, மா போன்ற குறும்படங்களில் இயக்குனர் சார்ஜா இயக்கும் இப்படத்தை இயக்குகிறார். இதில் யோகிபாபுவும் நடிக்கவுள்ளாராம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!