நயன்தாராவின் படமும் பொங்கலுக்கு திரைக்கு வருமா?

சென்னை:
நயன்தாராவின் படமும் பொங்கலுக்கு திரைக்கு வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வருகிற பொங்கலுக்கு தியேட்டர்களில் கடுமையான போட்டி உள்ளது. அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்டயும் ரிலீஸாகவுள்ளன.

இதனால் இவ்விரு படங்களில் எந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என்பது மில்லியன் கேள்வியாக உள்ளது. அன்றைய தினத்தில் சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன், ஆர்.ஜே.பாலஜியின் படமும் ரிலீஸாகவுள்ளன.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படம் ஜனவரி மாதம் தான் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படமும் பொங்கலுக்கு வெளியானால் அன்றைய தினத்தின் போட்டி மோதல் இன்னும் கடுமையாகும்.
ஏனெனில் நடிகர்களுக்கு சமமான ரசிகர் பட்டாளத்தை நயன்தாரா வைத்துள்ளார். மேலும் இந்த கொலையுதிர் காலத்தின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!