நயன்தாராவின் பெரிய மனசு

கோடம்பாக்கத்தில் வஞ்சிக்கப்பட்ட இயக்குநர்களுக்கு வாழ்வளிக்க நினைப்பவர்களில் நயன்தாரா முன்னிலையில் நிற்கிறார். ‘கத்தி’ கதைத் திருட்டுப் பிரச்னையில் பாதிக்கப்பட்ட இயக்குநர் மீஞ்சூர் கோபியை அழைத்து, ‘அறம்’ படம் நடித்து, தயாரித்து ஹிட் கொடுத்தார். தற்போது, சிம்புவால் ‘வேட்டை மன்னன்’ படத்தின் ஷூட்டிங்கில், அப்படியே கழற்றிவிடப்பட்ட இயக்குநர் நெல்சனை அழைத்து, எட்டு வருடங்களுக்குப் பிறகு ‘கோலமாவு கோகிலா’ படத்தை வெளியிட்டு ஹிட் கொடுத்திருக்கிறார்.

நடிகர் சிம்புவால், கிட்டத்தட்ட சினிமா கனவையே மறந்து விடுகிற நிலைக்குத் தள்ளப்பட்டார் இயக்குநர் நெல்சன். முதல் படம் பாதியிலேயே நின்று போனால், கோடம்பாக்கத்தின் அதிர்ஷ்ட கதவு அவ்வளவு லேசில் மீண்டும் திறக்காது. அபசகுணங்களைப் பார்க்கிற கோலிவுட்டில் இயக்குநர் நெல்சனிடம் கதை கேட்கவே எந்த ஹீரோவும் தயாராக இல்லாத போது, நயன்தாரா அழைத்து, பட வாய்ப்பையும் கொடுத்து, நெல்சனுக்கு பிரகாசமான வாழ்வையும் கொடுத்திருக்கிறார்.

‘நயன்தாராவுக்கு இது தேவையில்லாத வேலை’ என்று சிலர் பேசினாலும் நயன்தாரா, எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல்  துணிச்சலுடன் எடுத்த முடிவு இன்று அவருக்கு கைமேல் பலனைக் கொடுத்திருக்கிறது. பெரிய ஹீரோக்களுக்கு நிகரான ஓபனிங், சிறப்பான நடிப்பு என்று இப்போது ஆளாளுக்கு புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படத்தோட தாறுமாறு ஹிட்டால், தான் ஒதுக்கி வைத்த இயக்குநரின் வெற்றியையும், அது, தன் முன்னாள் காதலியால் நிகழ்ந்ததையும் எரிச்சலுடன் பார்க்கிறாராம் சிம்பு

Sharing is caring!