நயன்தாராவுக்கு போட்டியாக தமன்னா

தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அதிகம் நடித்துவருபவர் தமிழ் சினிமாவில் நயன்தாரா மட்டும் தான். மற்ற நடிகைகள் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எதுவும் செய்ததில்லை.

இந்நிலையில் நடிகை தமன்னா தற்போது தமிழில் இப்படி ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதே கண்கள் பட புகழ் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு புதிய ஹாரர் காமெடி படத்தில் தான் தமன்னா நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் யோகிபாபு, முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர்.

சோலோ ஹீரோயினாக தமன்னா நடிக்கும் முதல் தமிழ் படம் என்பதால், அவர் நயன்தாராவிற்கு போட்டியாக வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing is caring!