நயன்தாரா பற்றி ராதாரவி சர்ச்சை பேச்சு

நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கும் கொலையுதிர்காலம் திரைப்படத்தை சக்ரி டோலேட்டி இயக்குகிறார். வுமன் சென்ட்ரிக் படமான இதில் நடிகை பூமிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை பூஜா எண்டெர்டெயின்மென்டுடன் இணைந்து, எக்ஸெட்ரா எண்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ளனர். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார்.

இந்நிலையில்  ‘கொலையுதிர்காலம்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது . அதில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நயந்தாரவை குறித்து பேசுகையில்:

நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், அந்த பக்கம் சீதையாவாகவும் நடிக்கிறார் என அழுத்தமா சொன்ன அவர்.. முன்பெல்லாம் “பாக்குற‌வங்களை  கும்பிடுற‌வங்களத்தான் சாமியா நடிக்க வைப்பாங்க, ஆனால்..இப்போ—–  ” என மிகவும் மோசமான வார்த்தைகளால் சித்தரித்துள்ளார்..ராதாரவியின் இந்த பேச்சிற்கு திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Sharing is caring!