நயன்தாரா பற்றி ராதாரவி மீண்டும் சர்ச்சை…

கடந்த சில நாட்களுக்கு முன் ராதாரவி அவர்கள் நடிகை நயன்தாரா பற்றி தவறாக கூறியது பெரிய சர்ச்சையானது.

பிரபலங்கள் முதல் மக்கள் வரை ஒரு பெண்ணை பார்த்து ராதாரவி அப்படி கூற கூடாது அது பெரிய தவறு என்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஒரு குறும்பட விழாவில் கலந்துகொண்ட ராதாரவி பேசும்போது, இன்று என் பேச்சை கேட்டு மீடியாவும், பார்வையாளர்களும் கை தட்டுகிறார்கள். கொலையுதிர்காலம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிலும் அப்படித் தான் நடந்தது.

உண்மையை சொன்னால் ஆதரிக்கிறார்கள். நான் இனி படங்களில் நடிக்க முடியாது என்றார்கள். படம் இல்லை என்றால் நாடகங்கள், டிவி சீரியல்களில் நடிப்பேன். நான் நடித்துக் கொண்டே இருப்பேன்.

மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. எதுக்கு மன்னிப்பு கேட்கணும். என்ன கொலை குற்றமா பண்ணிட்டேன்? என மீண்டும் அதிரடியாக பேசியுள்ளார்.

Sharing is caring!