நயன்தாரா பிக்பாஸ் 3 தொகுப்பாளரா???

நடிகை நயன்தாரா இன்று தான் சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். சில நாட்கள் முன்பு அவரை பற்றி மீடியாவில் ஒரு தகவல் தீயாக பரவியது. அவர் பிக்பாஸ் 3 தொகுத்து வழங்கவுள்ளார் என்பது தான் அது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பதிவிட்ட ட்விட் தான் இப்படி ஒரு தகவல் பரவ காரணம். ஆனால் தற்போது அதற்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் ஒரு புதிய பதிவு வந்துள்ளது.

நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தை மே 12 மாலை 4:30 மணிக்கு திரையிடவுள்ளார்களாம். அதை தான் சில நாட்கள் முன்பு ட்விட்டரில் மறைமுகமாக பதிவிட்டுள்ளார். ஆனால் அது பிக்பாஸ் வதந்திக்கு காரணமாகிவிட்டது.

Sharing is caring!