நரகாசுரன் போஸ்டர்

துருவங்கள் 16 என்ற வெற்றிப் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கார்த்திக் நரேன். அடுத்ததாக நரகாசூரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அரவிந்த் சாமி, ஷ்ரேயா சரண், இந்திரஜித், சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதனை கெளதம் மேனனின் ஒன்றாக என்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் என டிரைலர் வெளியீட்டு விழாவிலேயே அறிவிக்கப் பட்டது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியைக் குறிப்பிட்டு தற்போது புதிய போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.

 

Sharing is caring!