நரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன்

துருவங்கள் பதினாறு படம் மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். இவர் இயக்கி உள்ள படம் நரகாசூரன். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன் ஆத்மிகா, இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை கவுதம் மேனனும், பத்ரி கஸ்தூரியும் இணைந்து தயாரித்தனர். படம் முடிந்து நீண்ட நாட்களாகியும் பைனான்ஸ் பிரச்னை காரணமாக கிடப்பில் இருந்தது. இதுதொடர்பாக கவுதம் மேனன் – கார்த்திக் நரேன் இடையே கருத்து மோதல் கூட ஏற்பட்டது. இதனால் டப்பிங் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

இப்படத்திற்கு, தணிக்கை குழுவினர் எந்த கட்டும் கொடுக்காமல் யு/ஏ சான்று கொடுத்திருப்பதாகவும், 1 மணிநேரம் 50 நிமிடங்கள் படம் ஓடும் என்றும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும், டிரைலரும் விரைவில் ரிலீஸாகும் என கார்த்திக் நரேன் டுவிட்டரில் தெரிவித்து ஒரு போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்.

மேலும் அந்த போஸ்டரில் கவுதம் மேனனின் தயாரிப்பு பேனர் மற்றும் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதனால் கவுதம் மேனன் இப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக தெரிகிறது.

Sharing is caring!