நரகாசூரன் வெளிவரும் திகதியில் மாற்றம்

ஆகஸ்ட் மாத இறுதியில் ரிலீஸாக இருந்த ‘நரகாசூரன்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் கார்த்திக் நரேன். இதை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் முக்கிய வேடங்களில்  இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ரோன் இதான் யோகன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் சுஜித் சாரங்.

ஃபேண்டஸி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை  இயக்குநர் கார்த்திக் நரேனே தயாரித்துளார். இந்நிலையில் இந்தப் படம் வருகிற வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 31ம் தேதி அன்று ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தினத்தில் ‘அண்ணணுக்கு ஜே’, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட 6 படங்கள் ரிலீஸாக இருக்கின்றதால் போதுமான தியேட்டர்கள் இல்லை.

எனவே போதுமான தியேட்டர்கள் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் ரிலீஸாக இருக்கிறது நரகாசூரன் .மேலும் விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் ஏற்கெனவே சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’, விஜய் சேதுபதியின் ’96’, சமந்தாவின் ‘யு டர்ன்’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!