நர்ஸ் ஆக பிரியா லால்

சுசீந்திரன் இயக்கி உள்ள படம் ஜீனியஸ். ரோஷன் ஹீரோவாக அறிமுகமாக, பிரியா லால் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் பற்றி பிரியா லால் பேசியதாவது : மலையாளத்தில் முதல் படம் ஜனகன். அப்படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்திருக்கிறேன். தமிழில் ஜீனியஸ் தான் முதல் படம். ஜீனியஸ் படத்தின் கதை எனக்கு தெரியாது. அது பற்றி ஒரு வரி தான் சுசீந்திரன் கூறினார். அப்போதே நடிக்க முடிவு செய்து விட்டேன்.

படத்தில் நர்ஸ் ஆக நடிக்கிறேன். எனது கதாபாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு மாணவி போல சுசீந்திரன் என்ன சொல்கிறாரோ அதை நடித்துவிட்டு வருவேன். பள்ளி பருவத்தில் எல்லோருக்கும் படிக்க வேண்டும் என்ற நெருக்கடியும், நிர்பந்தமும் இருக்கும். முக்கியமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஜீனியஸாக ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இப்படம் மிகவும் நெருக்கமாக இருக்கும். எனக்கும் அதிக நெருக்கம் இருந்தது.

இந்த படத்தில் இரண்டு ஜீனியஸ் இருக்கிறார்கள். ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா, இன்னொருவர் சுசீந்திரன். தமிழ் சினிமா மீது எனக்கு தீராத காதல் உண்டு. இங்கே நீடித்து இருக்க விரும்புகிறேன். முக்கியத்துவம் கொடுக்கும் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். பிகே படம் மாதிரி உளவியல் ரீதியான முக்கியத்துவம் இப்படத்திலும் இருக்கும். அக்டோபர் 26ம் தேதி இப்படம் வெளிவருகிறது என்றார்.

இவர், கொச்சினில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராகவும் இருந்துள்ளார். தமிழ் நடிகை ரேவதியை ரொம்ப பிடிக்குமாம் எதிர்காலத்தில் படங்கள் இயக்கவும் வாய்ப்பு இருக்காம்.

Sharing is caring!