நல்ல சேலஞ்ச்… நன்மை பயக்கும் சேலஞ்ச்… ஏற்றுக்கொண்ட தனுஷ்

சென்னை:
தெலுங்கு நட்சத்திரங்களின் சவாலை உடனே ஏற்றுக் கொண்டார் நடிகர் தனுஷ். இதுபோன்ற சேலஞ்சை ஏற்படுத்துங்கப்பா…

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி சினிமா துறை நட்சத்திரங்களுடனும் நெருங்கிய நண்பராக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் Haritha Haram சேலஞ்சு தற்போது வைரலாகி வருகிறது.

மகேஷ் பாபு உள்ளிட்ட பலர் செடி நட்டு அதை போட்டோ, வீடியோ எடுத்து வெளியிட்டனர். நடிகர் நாகார்ஜூனா அப்படி புகைப்படம் எடுத்து வெளியிட்டு, சில நட்சத்திரங்கள் இதை செய்யவேண்டும் என சேலஞ்சு கொடுத்துள்ளார்.

நடிகர் தனுஷ், கரண் ஜோகர், கார்த்தி ஆகியோரை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். நடிகர் தனுஷ் உடனே இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார். இதுபோன்ற நன்மை பயக்கும் சேலஞ்ச்சை செய்யுங்கப்பா…

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!