நல்ல வசூல்… எல்கேஜி படத்திற்கு நல்ல வசூல்…!

சென்னை:
ஆர்ஜே பாலாஜி நடித்த எல்கேஜி படம் சென்னையில் முதல்நாளில் மட்டும் ரூ. 32 லட்சம் வசூல் செய்துள்ளது.

இதுநாள் வரை காமெடியனாக மட்டும் நடித்துவந்த நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்போது சோலோ ஹீரோவாக நடித்துள்ள படம் எல்கேஜி. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், திரையிடப்படும் தியேட்டர்களும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் முதல் நாள் சென்னை வசூல் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது. 32 லட்சம் ரூபாய் சென்னையில் மட்டும் வசூலித்துள்ளதாம்.

ஒரு சின்ன பட்ஜெட் படத்திற்கு இது நல்ல துவக்கம் தான் என பாக்ஸ்ஆபிஸ் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!