நவாசுதீன் சித்திக் மீது பாலியல் குற்றச்சாட்டு

பாலிவுட்டில் குணசித்திர நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். தமிழில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ‘மாம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் ஓரளவு அறிமுகமான இவர், தற்போது ‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் இவர் மீது பாலிவுட் நடிகையும, முன்னாள் மிஸ் இந்தியாவுமான நிஹாரிகா பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை ‘மீ டூ’ மூலம் சுமத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது, “சில ஆண்டுகளுக்கு முன் நவாசுதீன் சித்திக் எனக்கு நண்பராக அறிமுகமானார். ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து எனது வீட்டின் வழியாக வருவதாகவும், வீட்டிற்கு வரலாமா என்றும் போன் செய்தார். நானும் அவரை எனது வீட்டிற்கு அழைத்து, காபி, டிபன் கொடுத்து உபசரிக்கும் விதமாக மரியாதை நிமித்தமாக அழைப்பு விடுத்தேன்.

ஆனால் வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்ததும், என்னை கட்டிப்பிடித்து அத்துமீற முயன்றார். ஒருகட்டத்தில் போராட முடியாமல் நானும் என்னை விட்டுக்கொடுத்தேன். தனக்கு ஒரு நடிகையோ அல்லது மிஸ் இந்தியாவோ மனைவியாக வர வேண்டும் என விரும்பியதாகவும், அது நடக்காமல் போய்விட்டதாகவும் கூறி பச்சாதாபப்பட்டார், பின்பு, அவர் மிகப்பெரிய பொய்யர் என தெரிந்ததும் அவரது நட்பை துண்டித்துவிட்டேன்” என கூறியுள்ளார் நிஹாரிகா.

Sharing is caring!