நாங்கள் வந்தால் அந்த நிகழ்ச்சியில் வேறு ஷோ ஆகிவிடும்

சென்னை:
நாங்கள் வந்தால் அந்த நிகழ்ச்சியில் வேறு ஷோ ஆகிவிடும் என்று பிரபல நடிகர் கூறியிருக்கிறார். என்ன விஷயம் தெரியுங்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் தொடர்ந்து இந்த சீசன் 2 ஐயும் தொகுத்து வழங்கி வருகிறார்.
முதல் வாரத்தை கடந்து இந்நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கிறது.
சிலரால் காமெடிகளும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் அதர்வா நடித்து வரும் செம போத ஆகாத படம் இவ்வாரம் வெளியாகவுள்ளது. இதில் ஹீரோ அதர்வாவும், இயக்குனர் பத்ரியும் கலந்துகொண்டனர்.

அப்போது பிக்பாஸ் வீட்டில் உங்களை கொண்டு போய் விட்டால் எப்படி இருக்கும் என கேட்கப்பட்டது. அதற்கு இயக்குனர் பல பேர் தெறித்து ஓடிவிடுவார்கள் என்றார்.

மேலும் அதர்வா, இதுவரை நான் அந்த நிகழ்ச்சியை பார்த்ததில்லை. ஒரு வேளை உள்ளே போனால் நன்றாக இருக்கும். ஆனால் அது வேற ஒரு ஷோ ஆகிவிடும் என நினைக்கிறேன் என கூறி உள்ளார்

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!