“நாங்க போனோம்னா… என்ன நடக்கும் தெரியுங்களா?”

சென்னை:
நாங்க போனோம்னா… ஒரே வாரத்தில் வந்திடுவோம்… இல்ல அனைவரையும் அனுப்பி அப்புறம்தான் வருவோம் என்று சொல்லியிருக்காங்க. யார் தெரியுங்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 17 ம் தேதி தொடங்கியது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 16 பேர் கலந்துகொண்டனர். இதில் மமதி வெளியே அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காப்பாற்றப்பட போவது யார் என்பது தான் எதிர்பார்ப்பு. இந்நிகழ்ச்சி குறித்து சினிமா பிரபலங்கள் சிலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் காமெடி நடிகரான சதீஷ் பிக்பாஸ் போட்டியாளரான நடிகர் மஹத் குறித்து அவ்வப்போது ட்விட்டரில் கமெண்ட் போட்டு வருகிறார். இந்நிலையில் அவர் சந்திரமௌலி படத்திற்காக பேட்டியளித்துள்ளார்.

இதில் நடிகை வரலட்சுமியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்கள் நாங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் முதல் வாரமே வெளியே வந்துவிடுவோம். இல்லையேல் எல்லோரையும் அனுப்பிவிட்டு தான் வருவோம் என தெரிவித்துள்ளனர். பிக்பாஸ் பார்ப்பது இப்போது தொழிலாகிவிட்டது என சதீஷ் கூறியுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!