நாங்க ரெடி… என்ஜிகே படத்தின் டீசரை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

சென்னை:
நாங்க ரெடி… சீக்கிரம் ரிலீஸ் செய்யுங்கள் என்று சூர்யா ரசிகர்கள் தயாராகி உள்ளனர்.

சூர்யாவின் என்.ஜி.கே., படத்தின் டீசரை தமிழகம் உட்பட 5 மாநில ரசிகர்கள் வரவேற்க தயாராகி வருகின்றனர். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் என்.ஜி.கே. இதில் சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக தற்போது நடக்கிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் டீசர் வரும் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த டீசரை வரவேற்க சூர்யா ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!