நாசர் மகன் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

சென்னை:
விபத்தில் சிக்கி வீட்டில் உள்ள நாசர் மகனின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்துக்கூறி அசத்தி உள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய் ரசிகர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர். விஜய் அண்ணா என்று அன்புடன் அழைக்கும் ரசிகர்களுக்கு அவர் பல்வேறு நெகிழ்ச்சியான உதவிகளையும் அன்பையும் வாரி வழங்கியுள்ளார். இதனால் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவராக திகழ்கிறார்.

நடிகர் நாசரின் மகன் பைசல் தீவிர விஜய் ரசிகர். அவர் விபத்தில் சிக்கி தற்போது வீட்டில் உள்ளார். அவரின் பிறந்தநாளில் விஜய் நேரில் சென்று கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை நடிகர் நாசரின் மனைவி, உனது விஜய் அண்ணா உன் அருகில்… உன் கனவு நிறைவேறியுள்ளது என ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!