நானா படேகர் மீதான பாலியல் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு

மும்பை:
நடிகர் நானா படேகர் மீதான பாலியல் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் நானா படேகர், சமீபத்தில் வெளியான ரஜினி நடித்துள்ள காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா டி.வி. ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நடிகர் நானா படகேர் கடந்த 2008ம் ஆண்டு இந்தி படப்பிடிப்பின் போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என்னை போன்று பல நடிகைகளை அவரை வன்முறையுடனே கையாண்டுள்ளார் என்று தெரிவித்து இருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது வக்கீலுடன் ஒஷிவாரா போலீஸ் ஸ்டேசன் சென்ற தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் உள்ளிட்ட 5 பேர் மீது எழுத்துப்பூர்வ புகார் மனு கொடுத்தார். இதன் பேரில் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!