நானே படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்

பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தார். இவர் நானா படேகர் நடித்த ஒரு இந்திப் படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு ஆடினார். அப்போது நானே படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம் சாட்டினார். இதையடுத்து அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ராக்கி சாவந்த் ஆடினார்.

இப்போது தனுஸ்ரீ தத்தா, நானே படேகர் மீது மீ டூ மூவ்மெண்ட் மூலமாக பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்த பிரச்னையில் நடிகை ராக்கி சாவந்த், நானா படேகர் பக்கம் நின்றார். “அவர் அப்படிப்பட்டவர் இல்லை தனுஸ்ரீ தத்தாவின் குற்றச்சாட்டு விளம்பரத்துக்காக ஜோடிக்கப்பட்டது. அதில் துளியும் உண்மை இல்லை. தனுஸ்ரீதத்தா தவறானவர்” என்று கூறியிருந்தார். இதையடுத்து தனுஸ்ரீதத்தா, ராக்கி சாவந்த் மீது 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Sharing is caring!