நான் இனி மைக் அணிய மாட்டேன்… போராட்டம் நடத்திய மும்தாஜ்

சென்னை:
“நான் இனி மைக் அணியமாட்டேன்” என போராட்டமே நடத்தி விட்டார் மும்தாஜ். எதற்காக தெரியுங்களா?

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ள நடிகை மும்தாஜ் உடல் நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். பிக்பாஸ் கொடுத்த டாஸ்கிற்காக மற்ற ஆண்கள் நடந்துகொள்ளும் விதம் சரியாக இல்லை என சில பெண் போட்டியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ட்ரெஸ்ஸிங் ரூம் லாக் செய்யப்பட்டுவிட்ட நிலையில் “நான் ரூமில் உடை மாற்ற முடியாது, ரூமை திறக்க சொல்லுங்கள்” என பலமுறை காமெராவை பார்த்து கேட்டார். ஆனால் எந்த பதிலும் வராததால் “நான் இனி மைக் அணியமாட்டேன்” என போராட்டம் நடத்தினார்.

டாஸ்க்கும் செய்யமாட்டேன் என அவர் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!