நான் தத்தெடுக்கிறேன் சொன்னார் சென்ட்ராயன்… நெகிழ்ந்தார் கமல்

சென்னை:
நான் ஒரு அனாதை குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறேன் என்று கமல் முன்னிலையில் சென்ட்ராயன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் அனாதை விடுதியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்குள் அழைத்து வந்திருந்தனர். அதுபற்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் குழந்தைகள் தத்தெடுப்பு பற்றி பேசினார்.

உடனே நடிகர் சென்ட்ராயன், “எனக்கு திருமணம் ஆகி 4 வருடங்களாக குழந்தை இல்லை. நீங்கள் அனுமதித்தால் தத்தெடுத்துக்கொள்கிறேன்” என்று பிக்பாஸ் வீட்டில் இருந்தே அறிவித்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கமல் நெகிழ்ந்து போய் அவரை பாராட்டினார். “உங்கள் மனைவிக்கு குழந்தை பிறந்தால், தத்தெடுக்கும் குழந்தை தான் உங்களுக்கு முதல் குழந்தையாக இருக்க வேண்டும்” என கூறினார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!