நான் தீவிர விஜய் ரசிகன்… சொல்வது விக்ரம் மகன்!

சென்னை:
விஜய் ரசிகன்… நான் விஜய் ரசிகன் என்று விக்ரம் மகன் துருவ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவர் தற்போது வர்மா என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.
பாலா இயக்கும் அந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.

காதலர் தினத்தன்று படம் ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் துருவ் விக்ரம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் யாருடைய தீவிர ரசிகர் என்பதை கூறியுள்ளார். துருவ் தீவிர விஜய் ரசிகராம். “நான் diehard தளபதி ரசிகன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!