நான் யாருமில்லை… தமிழ்படம் 2 சிங்கிள் டிராக் வெளியானது

சென்னை:
நான் யாருமில்லை என்ற சிங்கிள் டிராக் பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ்ப்படம் 2 படத்தில் இருந்து நான் யாருமில்லை என்ற சிங்கிள் டிராக் பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ்ப்படம் முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் தமிழ்ப்படம் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. மிர்ச்சி’ சிவா மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தின் டீஸர், சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது வீடியோ சிங்கிள் டிராக் தற்போது வெளியாகியுள்ளது.

நான் யாருமில்லை என்று தொடங்கும் அந்த சிங்கிள் டிராக்கில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் வசனங்கள் மற்றும் பாடல்களை கலாய்ப்பது போன்று பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!