நான் யாரையும் காதலிக்கலை… நடிகை கௌரி விளக்கம்

சென்னை:
இல்லங்க… இல்ல… காதல் எல்லாம் இல்ல என்று விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை கௌரி. எதற்கு தெரியுங்களா?

கடந்த வாரம் வெளியான 96 படத்தில் சின்ன வயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் நடிகர் கௌரி. இதே படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் நடித்திருந்தார்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் இணையத்தில் பரவி வந்தது. மேலும் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தியும் உலா வந்தது.

இதற்கு தற்போது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார் நடிகை கௌரி. தான் யாரையும் காதலிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!