நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுரேசுக்கு பதிலடி கொடுத்துள்ள சின்மயி

சென்னை:
ஆம். அவர் வீட்டில்தான் தங்கினோம்… ஆனால் நடந்தது என்ன என்று பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.

“வீழ மாட்டோம்” என்ற பெயரில் ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தான் வைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு வருமாறு அழைத்ததாக சின்மயி புகார் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேஷ் என்பவர் வெளியிட்ட வீடியோவில் “சின்மயி என் வீட்டில் தான் தங்கினார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள சின்மயி “ஆம். அவர் வீட்டில் தான் தங்கினோம். பாடகர் மாணிக்க விநாயகமும் தங்கினார். ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரை அனுப்பிவிட்டார்கள். ஆனால் எங்களுக்கு டிக்கெட் புக் செய்யவில்லை.”

“வேலைக்கு செல்லவேண்டும் என சொல்லி எங்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் சுரேஷ். அப்போது அவருக்கு ஆங்கிலம் சுத்தமாக வரவில்லை. அவர் மனைவியும் அப்படிதான். வைரமுத்து பற்றி பல விஷயங்கள் அவருக்கு தெரியும், ஆனால் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என்று கூறி அதிரடித்துள்ளார் சின்மயி. இதனால் இந்த விவகாரம் இன்னும் கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!