நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி பாலியல் தொல்லை குறித்து முகநூலில்…

தமிழ் படங்களில் நடித்து வரும் நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. இவர் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது :

அப்போது எனக்கு 16 வயது இருக்கும். 12 வருடங்களுக்கு முன்பு கண்டா கண்டாய்தி என்ற கன்னடப்படத்தில் நடித்தேன். படத்தில் ஒரு முத்தக்காட்சி இருக்கிறது. அது படத்தின் கதைக்கு முக்கியமானது. அதில் நடிக்க வேண்டும் என்று எழுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார்கள். நானும் ஒரே ஒரு காட்சி தானே என்று சம்மதித்து கையெழுத்துப்போட்டேன். அப்போது நான் அறிமுகமான புதிது என்பதால் இதற்கு சம்மதித்தேன்.

பாங்காக்கில் இதன் படப்பிடிப்பு நடந்தது. அந்த முத்தக் காட்சியை எடுப்பதற்காக ஒரு சிறிய லொக்கேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். உடன் வந்த என் தாய் உள்ளிட்ட பலரையும் அங்கிருந்து போகச் சொல்லிவிட்டார்கள். என் தாய் கண்கலங்கியபடியே “ஒண்ணும் நடக்காது தைரியமா இரு” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

ஒரு சிலர் மட்டும் அங்கே இருக்க அந்த காட்சியை எடுத்தார்கள். நான் சரியாக நடிக்கவில்லை என்று கூறி உடன் நடித்தவருக்கு 50 முறை முத்தமிடவைத்தார்கள். அதனை வெவ்வேறு கோணத்தில் எடுத்தார்கள். தப்பு நடக்கிறது என்று எனக்கு தெரிகிறது. ஆனால் அதை தடுக்க முடியவில்லை. நான் அழுதேன். “இந்த காட்சி மூலம் இந்த படமும் ஜெயிக்கும், நீயும் பெரிய இடத்துக்கு வருவாய்” என்றார்கள்.

படப்பிடிப்பு முடிந்து வந்ததும் அம்மாவிடம் இதைச் சொல்ல தயக்கம். மனசுக்குள் அழுதேன். தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூட தோன்றியது. என் தாய்க்கு விஷயம் தெரிந்து விட்டது. அவர் என் அருகிலேயே இருந்து எனது தற்கொலை எண்ணத்தை தடுத்தார். அந்த முத்தக்காட்சியை தணிக்கை குழுவினர் அனுமதிக்கவில்லை. அதன் பிறகே அதிலிருந்து வெளியே வந்தேன்.

இவ்வாறு சஞ்சனா கல்ராணி கூறியிருக்கிறார்.

Sharing is caring!