“நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன்… லஞ்சம், ஊழலை ஒழிப்பேன்”

சென்னை:
நான் நிஜத்தில் முதல்வர் ஆனால் முதல்வராக நடிக்க மாட்டேன். லஞ்சம், ஊழலை ஒழிப்பேன்” என்று சர்கார் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசினார்.

சென்னையில் நேற்று நடிகர் விஜய்யின் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் விஜய் பேசியதாவது;

என் படத்தின் வெற்றிக்கு கிடைக்கும் சந்தோசம், அதற்கு காரணமான ரசிகர்களை பார்க்கும்போது கிடைக்கிறது. அதற்காகவே உங்களை பார்க்க இந்த மாதிரி ஆடியோ விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என தோன்றுகிறது.

இந்த படத்திற்கு இசைஅமைக்க ரஹ்மான் கிடைத்தது படத்திற்கு ஆஸ்கார் கிடைத்த மாதிரி. மெர்சல்ல கொஞ்சம் அரசியல் இருந்துச்சு.. சர்கார்ல அரசியல வெச்சு மெர்சல் பண்ணியிருக்காரு இயக்குனர் முருகதாஸ்.

சர்காரில் தான் முதல்வராக நடிக்கவில்லை. நான் நிஜத்தில் முதல்வர் ஆனால் முதல்வராக நடிக்க மாட்டேன். லஞ்சம். ஊழலை ஒழிப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!