நிதின் சத்யாவுடன் இணையும் வைபவ் ரெட்டி

நடிகர் நிதின் சத்யா தயாரிக்க உள்ள அடுத்த படத்தில் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

ஆர் கே நகர், காட்டேரி படத்திற்குப் பிறகு வைபவ் ரெட்டி நடிக்க உள்ள படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரிக்க உள்ளார். இவர்  சென்னை 28, சரோஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். பின்னர் நடிகர் நிதின் சத்யா “ஷ்வேத்” என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து ‘ஜருகண்டி’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார். அந்த படத்தில் ஜெய், ரெபா மோனிகா ஜான், டேனியல் அன்னி போப் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நிதின் சத்யா  தயாரிக்கும்  அடுத்த படத்தில் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடிக்கிறார். க்ரைம் த்ரில்லர் படமாக  உருவாகும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் பிரபு சார்லஸ் என்பவர் இயக்குகிறார்.

Sharing is caring!