நியாயம் கிடைக்கும் வரை சர்கார் திரைப்படத்திற்கு தடை

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் கத்தி. லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப்படமும் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியது. இது எனது தாகபூமி குறும்பட கதை என அன்பு ராஜசேகர் அப்போதே குரல் தொடர்ந்து படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் இதற்காக போராடி வருகிறார்.

தற்போது சர்கார் பட விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைத்திருப்பதால் இதை மீண்டும் முன்னெடுத்துள்ளார் அன்பு ராஜசேகர். அதன்படி அவர் குடும்பத்துடன், வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளார்.

இதுதொடர்பாக அன்பு ராஜசேகர் கூறியிருப்பதாவது : எனது தாகபூமி குறும்படத்தை எனது அனுமதி இல்லாமல் முருகதாஸ் கத்தி திரைப்படமாக எடுத்ததன் தொடர்பாக, கடந்த 4 வருடங்களாக போராடி வருகிறேன். எனக்கான நியாயம் கிடைக்கும் வரை சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்ககோரி தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷாலை வலியுறுத்தியும், நான் அளித்துள்ள புகார் மனு அடிப்படையில் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்ககோரி, சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களை வலியுறுத்தியும் உண்ணாவிரதம் இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

Sharing is caring!