“நிராகரித்ததற்காக எனக்கு வரும் பாடல் வாய்ப்புகளை தடுத்தார் வைரமுத்து”

 

சென்னை:
வைரமுத்து மீது மட்டும் நான் குற்றம்சொல்ல காரணம் அவர் மட்டும்தான் நான் நிராகரித்ததற்காக எனக்கு வந்த அத்தனை பாடல்கள் வாய்ப்பையும் தொடர்ந்து பலவழிகளில் தடுத்தார் என்று பாடகி புவனா சேஷன் தெரிவித்துள்ளார்.

மீடு விவகாரம் பெரிதாக கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது. இதில் வைரமுத்து மீது சின்மயி புகார் அளித்தார். இதனையடுத்து பலர் இவர் மீது புகார் அளிக்க தொடங்கினர்.

அந்த வகையில் பாடகி புவனா சேஷன் என்பவரும் தன்னை வைரமுத்து தவறாக அழைத்தார் என்று கூறியிருந்தார். அவர் மீண்டும் நிருபர்களிடம் கூறியதாவது:

இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம்சாட்டும் மனப்பான்மையும் அதிகரிக்கிறது. எனக்கு நடந்த தவறை சொல்ல என் மகன் எனக்கு அளித்த நம்பிக்கைக்கு பிறகு தான் வெளியில் சொல்ல தைரியம் வந்தது.

வைரமுத்து மட்டுமே இவ்வாறு நடந்துகொண்டதாக கூறவில்லை. இன்னும் சிலரும் இப்படித்தான் பெண்களை படுக்கைக்கு அழைக்கத்தான் செய்கின்றனர். இப்படிக்கேட்ட 90 சதவீதம் பேர் மறுத்ததும் அமைதியாக சென்றுவிடுவார்கள்.

ஆனால் வைரமுத்து மீது மட்டும் நான் குற்றம்சொல்ல காரணம். அவர் மட்டும்தான் நான் நிராகரித்ததற்காக எனக்கு வந்த அத்தனை பாடல்கள் பாடும் வாய்ப்பையும் தொடர்ந்து பலவழிகளில் தடுத்தார்.
பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் இதை வெளியில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!