நிறுத்திக் கொள்ள வேண்டும்… சின்மயிக்கு கண்டனம்

சென்னை:
தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதை சின்மயி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சுவிசர்லாந்தில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர் கண்டனம் தெரிவித்துள்ளார். எதற்கு தெரியுங்களா?

கவிஞர் வைரமுத்து தன்னை ஓட்டல் அறைக்கு அழைத்தாக பாடகி சின்மயி குற்றச்சாட்டு வைத்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு இசை விழாவில் பாட சின்மயி சென்ற போது இப்படி நடந்ததாக அவர் கூறினார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சுரேஷ் என்பவர் தெரிவித்துள்ளதாவது;

“தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதை சின்மயி நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு படைப்பாளி மீது குற்றம்சாட்டும் சின்மயி மீது உலகத் தமிழர்கள் கோபத்தில் உள்ளனர். சின்மயி, அவரது தாயார் என்னுடைய இல்லத்தில்தான் தங்கினார்கள்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனால் கடும் புகைச்சல் எழுந்துள்ளது. தற்போது வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தபடியே உள்ளதால் கோலிவுட் வட்டாரங்கள் அதிர்ந்து போய் உள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!