நீங்கள் சாதிப்பீர்கள்… பிரகாஷ்ராஜுக்கு குஜராத் எம்எல்ஏ ஆதரவு

குஜராத்:
நீங்கள் சாதிப்பீர்கள், நான் இருக்கிறேன் உங்களுக்கு. இந்திய நாடாளுமன்றத்திற்கு நீங்கள் தேவை, குரலற்றவர்களின் குரலாக நீங்கள் இருப்பீர்கள் என்று பிரகாஷ்ராஜுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளார் குஜராத் சுயே., எம்எல்ஏ.

சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரகாஷ்ராஜ். பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேட்டியளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்… ஒரு புதிய வருடத்தின் தொடக்கம். பொறுப்பும் அதிகரித்திருக்கிறது. உங்களது ஆதரவில் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிட உள்ளேன். தொகுதி குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் குஜராத்தில் பாஜ்வுக்கு எதிராக நின்று வெற்றி பெற்ற சுயேட்சை எம்எல்ஏ ஜின்கேஷ் மேவானி தெரிவித்துள்ளதாவது;

என்னவொரு செய்தி! பிரகாஷ் ராஜுக்கு வாழ்த்துகள். நாம் இதை செய்து காட்டுவோம். நமக்கு இந்தியாவில் தெரிந்தவர்கள், முக்கியமாக தென்னிந்தியாவில் தெரிந்தவர்கள் எல்லோரும் உங்களுக்காக வருவார்கள். நீங்கள் சாதிப்பீர்கள், நான் இருக்கிறேன் உங்களுக்கு. இந்திய நாடாளுமன்றத்திற்கு நீங்கள் தேவை, குரலற்றவர்களின் குரலாக நீங்கள் இருப்பீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!