நீச்சல் உடை நாயகி

‘வட சென்னை’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நடிகை ஆண்ட்ரியா. தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் கேரக்டர் உள்ள நடிகை அவர். எதையும், பிடித்தால் பிடித்துள்ளது என்பார். இல்லை என்றால், எனக்கு பிடிக்கவில்லை என்று யாராக இருந்தாலும், முகத்துக்கு நேராகச் சொல்வார்.

அப்படிப்பட்டவர், சமீபத்தில் தாய்லாந்துக்கு சுற்றுலா பயணம் போய் இருக்கிறார். அப்போது கடற்கரையில், பிகினி உடையிலும், நீச்சல் உடையிலும் ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்து வந்திருக்கிறார். அந்தப் படங்களையெல்லாம் இன்ஸ்டாகிராமில் அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்தப் படங்களைப் பார்க்க, ரசிகர்கள் போட்டி போடுகின்றனர்.

Sharing is caring!